அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வித் லவ்’. கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற மார்ச் 6-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
