தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. அப்போதே அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்தது. தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 முதல் 35 சீட் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

தனியாக இருந்த போது அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காத நிலையில் ஒன்றாக இருக்கும்போது மட்டும் எப்படி 35 சீட் கிடைக்கும். எஸ்.பி வேலுமணி கூறியதை பார்க்கும்போது அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உட்கட்சி பூசல் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து தவறான தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் பாடம். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று கூறியுள்ளார். மேலும் திமுகவினர் நடுரோட்டில் ஆட்டை கொடூரமாக வெட்டியுள்ளனர். திமுகவினருக்கு என்மீது கோபம் இருந்தால் என் மீது கை வைக்கட்டும் என்று கூறியுள்ளார்.