மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு சில பயணிகளுக்கு நேரடியாக கடன் உதவி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து மற்ற பயனாளிகளுக்கும் கடன் தொகையை நேற்றைய தினமே வழங்கி விட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கடன் உதவி திட்டமானது பிரதமரின் ஸ்வநிதி யோஜனா அதாவது தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக கடன் உதவி வழங்கும் திட்டம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. மேலும் முத்ரா திட்டம் மற்றும் பசு வளர்ப்போருக்கான கடன் உதவி திட்டம் போன்றவற்றின் கீழ் 33,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.