சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அதேபோல் மாவோயிஸ்டுகளை காட்டி கொடுக்கும் கிராமவாசிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவோயிஸ்டுகள் பாதித்த பகுதியில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

அதாவது சுக்மா மாவட்டத்தின் தலைமையகத்தில் crpf வீரர்கள் முன்னிலையில் 12 ஜோடிகளுக்கு பெரிய அளவில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சில வீரர்கள் மனமகனின் உறவினராகவும், ஒரு சில வீரர்கள் மணமகளின் சகோதரியாகவும் மாறியுள்ளனர். மேலும் மணமக்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளனர். ரூ.1,100 மற்றும் 12 ஜோடி புடவைகளையும் தம்பதியினருக்கு பரிசாக அளித்துள்ளனர். இதனையடுத்து சி.ஆர்.பி.எஃப் படையின் தளபதி டி.என் யாதவ் புதிதாக மனமுடிந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஹாரிஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் இது ஒரு நல்ல தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வருங்காலத்தில் இது போன்ற திருமண நிகழ்ச்சிகள் தொடர வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாக குழு முழு அளவில் ஒத்துழைப்பை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.