தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2018 -ஆம் ஆண்டு இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1967 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2018-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்தது.

இந்நிலையில் மத்திய பிரதேச வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 2022 -ல் நடத்திய கணக்கெடுப்பில் மத்திய பிரதேசத்தில் 34 புலிகள், கர்நாடகாவில் 15 புலிகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் புலிகள் இறப்பது அதிகரிப்பதால் “புலிகள் மாநிலம்” என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.