அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாகாணத்தில் ‌ பழமை வாய்ந்த பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்கா கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான பொதுமக்கள் பூங்காவுக்கு வருகை புரிந்து வருகிறார்கள். இங்கு Atmos fear எனப்படும் ரைடு ஒன்று இருக்கிறது. இதில் ஏறிய பொதுமக்கள் சுமார் அரை மணி நேரமாக தலைகீழாக தொங்கிய சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த ரைடு திடீரென செயல்படாமல் போனது. இதனால் அங்கிருந்த மக்கள் கீழே இறங்க முடியாமல் தலைகீழாக தொங்கினர். இது தொடர்பாக உடனடியாக அவசரகால பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரைடரை சரி செய்தனர். பின்னர் அதில் இருந்த 28 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக 28 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.