புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கணேசன் முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் ஆவார்.

இவர்கள் காரில் 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெய ரவிவர்மா, கணேசன், சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா, கார், 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.