
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. தாய் மற்றும் மகனின் உடல்கள் அஜீஸ் நகர் அருகே உள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆற்றில் மிதந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்கள் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.