கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மாணவி தாலியை மறைத்தபடி பள்ளிக்கு வந்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் சோதனை செய்த போது கழுத்தில் தாலி இருப்பதை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனடியாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக வீட்டில் விசேஷம் என கூறி மாணவி மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்த நபர், மாணவியின் பெற்றோர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.