டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வாலிபர் ஒருவர் தன் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த வாலிபருக்கு 19 வயது இருக்கும். அப்போது திடீரென மூன்றாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் ஒன்று திடீரென வாலிபரின் தலையில் விழுந்தது.

இந்த விபத்து கடந்த 17ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடந்துள்ளது. இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.