
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடை உரிமையாளருக்கு 25,000 ரூபாய் இழப்பீடாக அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெராக்ஸ் எடுக்க பணம் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும், ‘பிச்சைக்காரன் கூட 3 ரூபாய் வாங்கமாட்டான் என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக மனுதார் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.