இந்தியாவில் மக்களுக்கு ஓய்வூதிய காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கே தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. NPS என்ற திட்டம் பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து பயன்பெற முடியும்.

இதில் முதலீடு செய்யும் காலம் முதிர்ச்சி அடைந்த பிறகு முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை மொத்தமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மற்ற தொகை மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கணக்கு தொடங்கலாம் எனவும் திட்டத்தைத் திறக்க மாத ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 66 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் மொத்த முதலீடு 1.58 கோடி மற்றும் 10% வருமானமும் கிடைக்கும். இப்படி செய்தால் ஒவ்வொரு மாதமும் 1.01 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது