ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க திறக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .மேலும் இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும் எனவும் பதினைந்து நாட்களுக்கு கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.