மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதுல் பலாசே என்ற நபர் தான் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். தனது வீட்டிற்கு சிறுமியை கடத்தி சென்றவர் பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியின் சடலத்தை வீட்டின் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார். இந்த கொடூரத்திற்கு அதுலின் தாய் மற்றும் சகோதரி துணையாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.