Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வெளியிடும்.

அந்தவகையில், வாட்ஸ்அப்பில் 3-க்கும் அதிகமான சாட்களை Pin செய்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்து வருகிறது. அந்த வகையில், 3க்கும் அதிகமான முக்கிய சாட்களை Pin செய்யும் வசதி தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும். எனவும் தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப்பில் தற்போது 3 சாட்களை மட்டுமே Pin செய்ய முடியும்.