ONEPLUS 12R (256GB) செல்போன்களை  வாங்கிய வாடிக்கையாளர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் தங்களில் போன்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்புக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செல்போனின் பயன்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாகவே இந்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.