இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 80,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.