ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜூப்பல் கிராமத்தில் கோர விபத்து நடந்தது. ஆசிரியை ஒருவர் பேருந்தில் வந்தார். அவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஆசிரியர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஆசிரியையின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தலை மற்றும் உடற்பகுதி துண்டு துண்டானது. கடந்த 15 நாட்களில் அந்த சாலையில் மூன்று பேர் உயிரிழந்ததால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.