வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக கடந்த 3 மதங்களுக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி மற்றும் கட்சி பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்த நிலையில், தொகுதியில் நடக்கும் பணிகளை சரிபார்த்து கட்சியின் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதே போல் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கட்சியை பலப்படுத்தும் அளவிற்கு தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது விடுதலை சிறுத்தை கட்சியில் 144 மாவட்ட செயலாளர் உள்ள நிலையில், ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில் கூடுதலாக 90 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும் திமுக, அதிமுக விற்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திருமாவளவன் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கட்சியினர் கூறும் நிலையில், இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி கூறும் போது தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. கடந்த 2021 தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 15 தொகுதிகள் கேட்ட நிலையில் 6 தொகுதிகள் மட்டும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிட நிறைய பேர் உள்ளதால் கட்சி தலைவர் திருமாவளவன் 25 தொகுதிகளை கேட்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருப்பதால் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தீவிர பணியை மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.