அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அவர், பயணிகள் ஒருவேளை நீலகிரி வந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார். நீலகிரி செல்ல இ-பாஸ் பெறுவது அவசியமாகும்.