பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடித்துள்ள நிலையில் படத்தில் இருவரின் நடிப்புமே பாராட்டப்பட்டது. இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக இருந்தது என்று ரசிகர்கள் பலரும் பாராட்டினர். ஆனால் ராம்சரனின் குடும்பத்தினருக்கும் ஜூனியர் என்டிஆரின் குடும்பத்தினருக்கும் பகை இருப்பது போன்றே தெலுங்கு திரை உலகில் பேசப்படுகிறது. சமீபத்தில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசான போது கூட கருத்து மோதல்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கடந்த 3 தலைமுறைகளாகவே ராம்சரணின் குடும்பத்திற்கும், ஜூனியர் என்டிஆரின் குடும்பத்தினருக்கும் பகை இருப்பதாகவே தெலுங்கு திரை உலகில் பேசப்படுகிறது. இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரிடம் உங்களுடைய பகையை தாண்டி எப்படி நட்பு பாராட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராம்சரண் எங்கள் குடும்பத்திற்குள் பகை இருப்பதாக வரும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எங்கள்  இருவருக்கும் இருக்கும் போட்டி தான் எங்களை நட்பாக்கியது என்று கூறினார். மேலும் இது குறித்து ஜூனியர் என்டிஆர் கூறும் போது காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் எப்படி இயற்பியல் என்று சொல்லப்படுகிறதோ அதே போன்று தான் எங்களுடைய நட்பும்‌. எங்கள் இருவரின் எதிரெதிர் குணங்கள் தான் எங்களது நட்பை எளிதாக மாற்றியது என்று வித்தியாசமான முறையில் பதில் அளித்தார்.