ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு உயரமான சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள் தப்பி சென்றாலும் அவர்கள் சிக்கிக் கொள்ளும் வகையில், அந்த சுவருக்கு மேல் உயரழுத்த மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை கண்காணிக்க 18 சிறை காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இறுக்கமான பாதுகாப்பு இருந்தபோதிலும், சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த சிறையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேவல் கிஷோர் மஹவார் மற்றும் அனாஸ் குமார் ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். நண்பர்களான இவர்கள், கூட்டாக சேர்ந்து திருட்டு செய்து தப்பி ஓடும் வழக்கம் கொண்டவர்கள். சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள், ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவத்தன்று இரவு நேரத்தில், சிறை அதிகாரிகள் சற்று அசதியடைந்திருந்தபோது, இருவரும் சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சிறையில் உள்ள 18 அடி உயரமுள்ள ரப்பர் குழாயைப் பயன்படுத்தி, 27 அடி உயர சுவரில் ஏறினர்.

உயரழுத்த மின்சார கம்பி வேலியின் மீது தாவி குதித்து, தங்களைப் பாதுகாத்துக் கொண்டு இருவரும் சிறையைத் தாண்டி வெளியேறினர். சிறையில் ஒன்றரை மணி நேரம் சுற்றிய பார்த்து, ஒரு வழியாக வெளியேறும் வழியைக் கண்டறிந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தெரியவந்ததும், போலீசார் அவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், நேற்று மாலை போலீசாரால் அனாஸ் குமார் கைது செய்யப்பட்டார். மற்றொரு கைதி நேவல் கிஷோர் மஹவாரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த தப்பித்தல் சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு, அருகே இருந்த பெண்கள் சிறையில் இருந்து தப்ப முயன்றவர்கள், சிறை சுவரைப் பயன்படுத்தினர். ஆனால், போர்வை சேதமடைந்ததால் அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறை முயன்றபோது, அவர்கள் வெற்றிகரமாக சிறையில் இருந்து தப்பினர். இந்த சம்பவங்கள், ஜெய்ப்பூர் சிறை பாதுகாப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளன.