நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள கடைகளில் நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீடீர் ஆய்வு செய்யபட்டது. இதில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினரும் இணைந்து சோதனை நடத்தினார்கள்.
அந்த ஆய்வில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.