
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கொன்னுரை சேர்ந்த பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
அதாவது வலது கையில் ஆறு விரல்களும், இடது கையில் ஏழு விரல்களும், இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியம் அடைந்தனர். குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும் பயப்பட வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.