காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோயால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்குவதற்காக மூன்று நாள் எந்த ஒரு தாக்குதலும் மேற்கொள்ள மாட்டோம் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மனிதாபிமான அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி முகாமின் மூலம் 10 வயதுக்கு உட்பட்ட 640,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தடுப்பூசி போடுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்கலாம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது