
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 3 ஆசிரியர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது தொடர்கதையாகி விட்டது. வேலூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் ஏடிஜிபி தன் உயிருக்கு ஆபத்து என்று கூறுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிவகங்கையில் காவல் நிலையத்தில் வைத்தே பெண் எஸ்ஐ தாக்கப்படுகிறார். போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் என்பது தொடர்கதை ஆகிவிட்ட நிலையில் குற்றவாளிகள் அச்சமின்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மேலும் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது என்பதே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சாட்சி என்று கூறினார்.