பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 11 மாவட்டத்தில் மின்னல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

இடி மற்றும் மின்னல் வெட்டு நேரங்களில் மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுரைகளை  மக்கள் தவறாது பின்பற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.