ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதை தடுக்கலாம். இந்நிலையில் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மத்திய அரசால் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தது.

தற்போது அதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்கு பிறகு எந்த சூழ்நிலையிலும் இணைப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிடிஎஸ் போர்டல் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.