மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது ரெனாவி கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களில் யாருமே அசைவம் உண்பது கிடையாதாம். அதனால் இக்கிராமம் சுத்த ‘சைவ கிராமம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னெவென்றால், இந்த கிராமத்தில்  ரேவண சித்தர் கோவில் இருப்பதால், கிராம மக்கள் சைவ உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.

அதுமட்டுமின்றி இங்கு பெண்களுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும்பொழுது அந்த இளைஞர்களும் அசைவத்திற்கு No சொல்லும் பெண்களையே திருமணம் செய்து கொடுப்பார்களாம். பலநூறு ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருவதாக கூறுகிறார்கள்.