அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜீவுக்கு முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி அவதூறு கருத்தை கூறியதாக வெங்கடாசலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராஜுவின் கருத்து தனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராஜுவின் கருத்துக்கு அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலத்தை தொடர்பு படுத்தி பேசியதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகை திரிஷாவை வெங்கடாசலத்துடன் தொடர்புபடுத்தி பேசிய ராஜு :  

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது நடிகைகள் அழைத்துவரப்பட்டதாகவும், அதில் குறிப்பாக நடிகை திரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார் ராஜு.

அதாவது அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் கேட்டதன் பேரில் ரூபாய் 25 லட்சம் கொடுத்து திரிஷாவை கூவத்தூர் ஹோட்டலுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும், மேலும் பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என பரபரப்பை கிளப்பினார். இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இயக்குனர் சேரன், ஆர்கே செல்வமணி, காயத்ரி ரகுராம், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் ஏ.வி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக ஏவி ராஜு விளக்கம் அளித்துள்ளார். எந்த இடத்திலும் திரைப்பட நடிகையையோ, யாரையும் அவதூறாக சொல்லவில்லை, வேறொருவர் சொன்னதைத்தான் நான் குறிப்பிட்டேன். சமூக வலைதளங்களில் சித்தரித்து சிலர் என் மீது அவதூறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஒருவேளை உங்களது மனது புண்படும்படி இருந்தால் இயக்குனர் சேரன், ஆர்கே செல்வமணி, திரிஷா ஆகியோரிடம் மன்னிப்பு கோருவதாக ஏவி ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறையிலிருந்துதான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.