தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து whatsapp செயலி மூலம் சுமார் 2 கோடியை 8 லட்சத்தி 76 ஆயிரத்து 480 பெயர்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. அதனை சுமார் 1,77,50,000 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த புதிய முயற்சியாக வரலாற்றில் முதல் முறையாக உடனுக்குடன் நிதிநிலை அறிக்கை மக்களை சென்று சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது