வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன. குறிப்பாக, தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்புக்கு அன்றைய தினம் விடை கிடைத்துவிடும்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் அதே மேடையில் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். கூட்டணி தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேர்தல் பணிகளை முறைப்படி மதுராந்தகம் மேடையிலிருந்தே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
