சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்னைக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 விற்பனை ஆகிறது.  சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பார்வை எப்போதும் தங்கத்தின் மீது தான் இருக்கும். அது பாதுகாப்பான முதலீடாக  கருதுவார்கள். அதன்படி பார்த்தோம் என்றால்? தங்கத்தின் விலை இப்போ குறைவுதற்கு முக்கிய காரணம்… அமெரிக்காவில் இப்ப வருகின்ற பொருளாதாரப் புள்ளி விவரங்கள் எல்லாம் கொஞ்சம் சாதகமாக உள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கமாக அதிகரித்ததனால் கடனுக்கான வட்டி வீதங்களை உயர்த்தி கொண்டே வந்தார்கள். இதனால் வங்கிகளின் முதலீடு போனதால் தங்கத்தோட விலை இப்போது குறையா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கக்கூடிய கடன் பத்திரங்கள் தொடர்ந்து ஏறிக்  கொண்டு வருகிறது. இதற்க்கு வட்டி வீதங்கள் அதிகமாக கிடைக்கின்றது.   உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவா இருக்கிறது. இதன் காரணமாக தங்கத்திலிருந்து முதலீடுகளை எடுத்து, பத்திரங்களில்  முதலீடு செய்து கொண்டு வருகிறார்கள். இது தான் தங்கத்தின் விலை குறைய முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்தில் தங்கம் சவரனுக்கு 2160 குறைந்து 42, 320 விற்பனை செய்யப்படுவைத்து குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை நிலவரம்;

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 528 குறைந்து 42,320 க்கு விற்பனை.  செய்யப்படுகின்றது. அதேபோல சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 66 குறைந்து 5290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.