புவி வெப்பமடைதல் பூமியின் காலநிலையை கடுமையாக பாதிக்கின்றது. ஏற்கனவே துருவங்களில் தண்ணீர் வேகமாக உருகி வருகின்றது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் கணிசமாக உயரும். இதனால் கடலோரப் பகுதிகள் கடலில் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 2050 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற நியூயார்க் நகரம் உட்பட 32 கடலோரப் பகுதிகள் கடலில் கலக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.