தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து ஒரு அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை என்பது ஆளுங்கட்சியான திமுகவின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதன் பின்னணியில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் நோக்கம் மறைந்துள்ளதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, அதன் மூலம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற விஜய் மறைமுகமாக உதவி செய்து வருவதாகத் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

‘விசில்’ சின்னத்திற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மறைமுகமாக பாஜகவிற்கே சாதகமாக முடியும் என்பதால், மக்கள் இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.