
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, நான் சமீபத்தில் விஜயை நேரில் சந்தித்து பேசினேன். அதேபோன்று மற்றொரு முறை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த சந்திப்பு நிகழவில்லை. நாங்கள் அரசியல் பற்றி பேசினோன். என்னிடம் காங்கிரஸ் கட்சி பற்றி விஜய் கேட்டார்.
நான் அவரிடம் அந்த கட்சியை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறிவிட்டேன். கூட்டணி குறித்து விஜய் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியை பற்றி சீமானிடம் கேட்ட நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு தகுந்தார் போன்று தற்போது சீமானுடைய பேட்டியும் அமைந்துள்ளது.
இந்நிலையில் தேசிய கட்சிக்கான காங்கிரஸ் கட்சியுடன் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து போட்டியிடுவது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆனால் இந்த கூட்டணி எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி தற்போது ஆளும் கட்சியான திமுக உடன் கூட்டணியில் இருக்கிறது. அதே சமயத்தில் விஜயதாரணி; “ராகுல் காந்தி கூறியதால் தான் விஜய் கட்சியை ஆரம்பித்தார்” என்று சமீபத்தில் கூறி புயலைக் கிளப்பியிருந்தார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழக அரசியலில் விஜய் கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில் இளைஞர்களின் செல்வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அந்த கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் வெற்றிவாகை சூட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
மேலும் அதே சமயத்தில் நடிகர் விஜய் தனித்துப் போட்டியிடவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.