
தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருவள்ளுவரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு என்பது சீர்கெட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் பலாத்காரம், படுகொலை மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளிலும் பாலியல் பலாத்காரம் மற்றும் போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.
பின்னர் யார் வருவதற்காகவும் மற்றொரு கட்சி வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அவரவரின் கட்சி பணிகளை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய கட்சி பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அதேபோன்று அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சிகள் அவர்களுடைய கட்சி பணிகளை செய்கிறார்கள். மேலும் தேமுதிக மற்றும் அதிமுக இடையே கூட்டணி கண்டிப்பாக தொடரும் என்று கூறினார்.