தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்த விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக முதல் மாநாட்டின் போதே அறிவித்துவிட்டார். குறிப்பாக அதிமுக தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டால் விஜயுடன் கூட்டணி வைக்க ரெடி என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் தலைமையில் தான் கூட்டணியெனவும் விஜய்யை முதல்வராக்க சம்மதித்துவரும் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி அமைப்போம் என்றும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. அதோடு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் இது தொடர்பாக வரும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச்  முதல் வாரத்தில் நடிகர் விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.