தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதாவது அதிமுகவின் மறைந்த தலைவர்கள் மற்றும் அதிமுக கட்சியில் இருப்பவர்களை அண்ணாமலை தொடர்ந்து விமர்சிப்பதாகவும் கூட்டணி தர்மத்திற்கு எதிராக அவர் செயல்படுவதாகவும் கூறி கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அதிரடியாக அறிவித்தது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதனை அதிமுக மறுத்துவரும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் கூட்டணி பற்றி கேட்டபோது தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதன் காரணமாக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை அதிமுக தலைவர்கள் மறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திகழ வேண்டும் என்று கட்சிகள் வலியுறுத்தி வருவதால் தற்போது பாஜக மேலிடம் அதிமுகவுடன் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது பாஜகவில் பொறுப்பாளர்கள் மற்றும் புதிய தலைவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை என்னும் முழு வீச்சில் நடக்கும் என்றும் 2026 தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் அப்போது இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.