நடிகர் விஜய் நேற்று 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கல்வி உதவித் தொகை, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  இந்நிலையில்  மதுரையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது. எல்லாரும் அரசியலுக்கு வரலாம்.

இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து குடிமகனும் அரசியலுக்கு வரலாம். பள்ளியிலேயே 14 வயதிலேயே அரசியல் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், 2026க்கு ரொம்ப தூரம் இருக்கு; நாளைக்கு இருப்பமானு பார்ப்போம் என பதிலளித்தார்