தற்போது எனக்கு 69 வயதாகிறது, ஆனால் 25 வயது இளைஞனை போல இருக்கிறேன், 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சரத்குமார், 2026 ஆம் ஆண்டு தன்னை முதலமைச்சர் ஆக்கினால் 150 ஆண்டுகள் உயிரோடு இருக்கும் அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். அதிமுக தமது உழைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு கருவேப்பிலையாக தூக்கி எறிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.