சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்நிலையில் 36.3 கோடி சொத்து முடக்கத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறக்காவலர் பாபு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். EDயால் முடக்கப்பட்ட ரூ. 34.7 லட்சத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அறக்கட்டளைக்கு அசையா சொத்துகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.