
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் 2026 இல் அதிமுக வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக அதிமுக தலைமையில் அடுத்து வரும் தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிய இருப்பதாக தற்போது எஸ்பி வேலுமணி கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்றும் அவருடைய முதல் களப்பயணம் கோவையிலிருந்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.