கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 12 மாதங்கள் அவரால் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு நெய்மார் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தான் தான் விளையாடும் கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார். எனவே உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதற்கு தன்னால் முடிந்த அளவிற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.