![](https://www.seithisolai.com/wp-content/uploads/2025/01/varun-down-1736501335.webp)
இந்திய அணியின் வீரர் வருண் ஆரோன் உள்ளூர் மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் சிறந்த வேக பந்துவீச்சாளர். கடந்த 2011 இல் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் போட்டிகளில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணி சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டில் கடைசியாக விளையாடி உள்ளார்.
அதன் பின் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். 52 ஐபிஎல் தொடர் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் அணிகளான டெல்லி கேப்பிட்டல், ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி 2024- 2025 நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். வருண் ஆரோன் அண்டர் 19 முதலே ஒரு சிறந்த வேகப் பந்துவீச்சாளர். இவர் தனது 35 வயதிலேயே ஓய்வு அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் ஓய்வை அறிவித்திருக்கலாம் என கூறுகின்றனர்.