சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்தியோதயா திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள், ஒற்றை ஆதரவற்றோர் பிரிவை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். மாநிலத்தில் அந்தியோதயா பிரிவில் 14.92 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் 52.46 லட்சம் பேர் முன்னுரிமை பிரிவினரும், 37,708 ஒற்றை ஆதரவற்றோர் பிரிவினரும், 15,351 மாற்றுத்திறனாளிகள் பிரிவினரும் உள்ளதாகவும் சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது.