இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் புதிய திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்சட் டெபாசிட் என்று சொல்லப்படும் வைப்பு தொகைக்கான வட்டியை எஸ்பிஐ வங்கி உயர்த்தி உள்ளது.

இதனால் ஏழு முதல் 45 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு மூன்று சதவீதமாக இருந்த வட்டி தற்போது 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.75 சதவீதமாக இருந்த வட்டி ஆறு சதவீதமாக உள்ளது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி 6.5 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.