2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் ஷர்மாவுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதை ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

பிசிசிஐ கூட்டத்தில் தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஜெய் ஷா மற்றும் சில மூத்த பிசிசிஐ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏனெனில் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், இடையில் மிகக் குறைவான டி20 தொடர்களை மட்டுமே இந்திய அணி விளையாடும். இதனிடையே  மகளிர் பிரீமியர் லீக்கின் போது ரோஹித் பற்றி விவாதிக்க ஜெய் ஷா மறுத்துவிட்டார்.

அதாவது பெண்கள் பிரிமியர் லீக் மினி ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் கலந்து கொண்டார். இதற்கிடையில், ரோஹித்தின் டி20 எதிர்காலம் குறித்து ஜெய் ஷாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் இந்தக் கேள்வியைத் தவிர்த்தார்.

ஜெய் ஷா கூறுகையில், ‘ரோஹித்தின் டி20 எதிர்காலம் குறித்து தெளிவாக கூற வேண்டிய அவசியம் என்ன? டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கு முன் ஐபிஎல் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்களும் உள்ளன.’ என்றார். மேலும் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு தகுதியானவராக இருக்கலாம் என்று ஜெய் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை காயம் அடைந்து நீண்ட நாட்களாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் ஆப்கானுக்கு எதிரான தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்த ஹர்திக் பாண்டியா சாத்தியமானவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மறுபுறம், ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்திய விதத்தில் பிசிசிஐ உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் ரோஹித் சர்மா பிசிசிஐ மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் டிராவிட்டும் உடனிருந்தார். அப்போது, ​​விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனினும், அவர் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஹர்திக் பாண்டியாவும் இந்த தொடரில் இருந்து மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.