2024 ஆம் ஆண்டில் மூன்று ராணுவ உழவு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகள் மேற்கொள்வதால் தங்கள் நாட்டை பாதுகாக்க தென் கொரியா அமெரிக்காவுடன் நட்பு கொண்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது வடகொரியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தாக மாறலாம் என்பதால் வடகொரியா ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சமீபத்தில் உளவு செயற்கைக்கோள் ஒன்றை வடகொரியா வெற்றிகரமாக ஏவியது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் “2024 ஆம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் ஏவப்படும். போர் பதிலடி திறன்களை பெறுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். நவீன ஆளில்லா போர் உபகரணங்கள் கட்டமைக்கப்படும்” என கூறியுள்ளார்.