வாஷிங்டனில் ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயதை 75. ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கருக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டவர் டாம் வில்கின்சன். ‘மைக்கேல் கிளேட்டன்’, ‘இன் தி பெட்ரூம்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் டாம் வில்கின்சன். இவரது மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.